தங்கம் விலை தொடர் சரிவு! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
தங்கம்

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் எட்டி வரும் நிலையில், இது மந்த நிலைக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

தங்கம்

சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையான நிலையில், இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.4,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.38,400-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,944-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து, ரூ.3,932-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, ரூ.60,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web