தங்கம் விலை மீண்டும் சரிந்தது! நகை பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்

இன்று காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது நகைப் ப்ரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீதான ஆர்வம் ஒரு போதும் குறைந்தது இல்லை. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது. 

கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அதற்கேற்றாற்போல் தற்போது பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது.

தங்கம்

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.37,320-க்கு விற்பனையாகிறது. 

அதே போல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,838-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் குறைந்து, ரூ.3,821-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம்

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.61,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web