தங்கம் அதிரடி விலை சரிவு!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
தங்கம்

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில்  ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. இதனையடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைந்து வருகிறது.

தங்கம்

இருந்தாலும் அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 
இந்நிலையில், ஆகஸ்ட் தொடக்கம் முதலே தங்கத்தின் விலையானது சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் தொடர்ந்து தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகஸ்ட் 20ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்கம்  திடீர் உச்சம் அடைந்தது.  

தங்கம்
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வழக்கத்திற்கு மாறாக சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4800க்கும் , ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.38,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 60,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web