குட் நியூஸ்!! செப்டம்பர் 30 வரை இலவசம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
பூஸ்டர்


இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றன. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 16,2021 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு  வருகிறது

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி?!!

இந்நிலையில், செப்டம்பர் 30 வரை மட்டும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வரும் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை 18-59 வயதுடையவர்களுக்கு அரசு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதாக அறிவித்திருந்தது.  

 

அசத்தல்!! பூஸ்டர் டோஸ் தடுப்பூசி!! பிரதமர் மோடி அறிவிப்பு!!
பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது. செப்டம்பர் 30 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் சீக்கிரமாக செலுத்திக் கொள்ள  வேண்டும். இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். அரசின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என  பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web