குட் நியூஸ்! தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைகிறது!

 
கொரோனா

நல்ல விஷயமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைகிறது. நேற்றைய தினசரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் புதிதாக 1712  பேருக்கு தொற்று பதிவாகிருந்த நிலையில் நேற்று அது சற்று  குறைந்து 1,624 ஆக குறைந்துள்ளது.  

 இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  மொத்த பாதிப்பு 35 லட்சத்து 41 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது. நல்வாய்ப்பாக கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதால்  இந்தத் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 32 ஆகவே உள்ளது.  நேற்று ஒரு நாளில் மட்டும் 2,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34லட்சத்து 89 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 13,510 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

 இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 353 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 171, கோவை 159, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web