குட் நியூஸ்! மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது! பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

 
school boy sad சோகம் பள்ளி மாணவன் சிறுவன்

தனியார் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமை அதிக அளவு இருப்பதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

மழலையர் பள்ளி

வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி சோகம் பள்ளி தேர்வு

முன்னதாக மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படும் போது அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web