குட் நியூஸ்! மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் தள்ளுபடி?! கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்!

 
மகளிர் சுய உதவிக் குழு

தமிழகத்தில், பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து திமுக அரசு, செயலாற்றி வருகிறது. அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்வி படிக்கும் வரையில் உதவித்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்ற நிலையில், தற்போது மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை ரத்து செய்ய, கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையைத் திறந்து வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் பெரியசாமி, அந்த கூட்டத்தில் பேசும் போது, சென்னையின் மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது  மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு  சுய உதவி குழு கடனை ரத்து செய்வது குறித்து அதனை  கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.

மகளிர் சுய உதவிக் குழு

தீபாவளிக்கு பிறகு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழகத்தினை பொறுத்த வரை மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை, முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. சுய உதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்தவித கடன் கேட்டு வந்தாலும் அவர்களுக்கு கடன் கொடுக்க மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

சுய உதவி குழு கடன்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதுபோல சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசிதுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் வந்து அதற்கான பயன்களை பெற்றுக் கொள்ளலாம் . முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உடனே மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் ரூ2750 கோடியை  தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போது மீண்டும்  சுய உதவி குழு கடன்களுக்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசிதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி எப்போது? அமைச்சர் ஐ. பெரியசாமி பதில்..!!

தமிழகம் முழுவதும் நகைக்கடன் பெற்றவர்கள் மொத்தத்தில் 99.5 % பேருக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி உடையவர்கள் அனைவருமே அதற்கான பயன்களை பெற்றுக் கொள்ளலாம் . அத்துடன் மாநில அரசின் திட்டங்கள் மத்திய அரசால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் செய்து வருகிறது யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என ஆவேசமாக பேசியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web