சிறை வாசிகளுக்கு குட் நியூஸ்!! டெலி இன்டர்காமில் உறவினர்களுடன் பேசலாம்..

 
டெலி இன்டர்காம்

விசாரணை கைதிகளின் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேசவும் குண்டத் தடுப்பு சட்ட கைதிகள், தண்டனை கைதிகள் செவ்வாய், வியாழக்கிழமை பார்த்து பேசவும் அனுமதிக்கப்படுவர்.  இதற்காக சிறை அதிகாரிகளுக்கு மனு அளித்து அதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர்கள் பேச முடியும். சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள். வழக்கறிஞர்கள் இதே போன்று தான் பேசும் நிலையில் இருந்தது. வயதான கைதிகள் உறவினர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

டெலி இன்டர்காமில்

இந்த நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி டெலி இன்டர்காம் மூலம் மிகவும் எளிதாக பேசும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட்டது.  இந்த டெலிஇன்டர் காம் வசதி சென்னை, கோவை, மதுரை, வேலூர், சேலம் என அனைத்து மத்திய சிறைகளிலும் அமைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் முதல் முறையாக கோவையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்தம் 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது.  

டெலி இன்டர்காமில்

இந்நிலையில் அடுத்தப்படியாக  சேலம் மத்திய சிறையில் கைதிகள் உறவினர்களுடன் பேசுவதற்கு டெலி இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கைதிகளும், உறவினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  சேலம் மத்திய சிறையில் அமைக்கப்பட்ட 20 டெலி இன்டர்காமை, சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன்   துவக்கி வைத்தார். அப்போது சிறைக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் கார்மேகம், டெலி இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளதை பாராட்டினார்.  

From around the web