அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்!!

 
அரசு பேருந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றி கொண்டு திண்டிவனம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.  இந்நிலையில்   பேருந்து ஆலகிராமம் அருகே வந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார்  30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை அப்பகுதியில் இருந்த  பொதுமக்கள் உதவியுடன்   மீட்டு   சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்   விபத்து குறித்து  பெரியதச்சூர்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உள்ள அரசு நகர பேருந்துகள் சரியாத தரத்தில் இல்லை என்றும்,  அதில்  மக்கள் பயணிக்க ஏதுவான நிலை இல்லை என கூறும் பொதுமக்கள்,  மக்களின் உயிர் மீது அரசு கவணம் செலுத்தி தரமான பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற தரமற்ற பேருந்துகளை ஆய்வு செய்து அகற்றவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

From around the web