இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை! 864 காலி பணியிடங்கள்! நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 
மத்திய அரசு வேலை

இன்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கு மத்திய அரசில் 864 காலி பணி இடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நமக்கு கிடைக்காது என்று ஒதுக்கி தள்ளாமல், நேர்மையாக முயற்சி செய்து உழைத்தால், நிச்சயமாக வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால், இன்றே விண்ணப்பிக்க தயாராகுங்க. ஆல் த பெஸ்ட். நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) என்பது இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும், இது மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது. 

இதன் முக்கிய செயல்பாடு இந்தியாவில் உள்ள மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகும். பொறியியல், திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் ஆயத்த தயாரிப்பு திட்ட ஒப்பந்தங்களையும் இந்த அமைப்பு மேற்கொள்கிறது.

தமிழகத்தில் இன்று என்ஜினியரிங் படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! மாணவர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 864 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை குறித்த விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பதவி பெயர்: எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி

மொத்த காலியிடம்: 864

மத்திய அரசு வேலை

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங்

சம்பளம்: ரூ.40,000 - 1,40,000/-

வயதுவரம்பு: அதிகபட்ச வயது 27

கடைசி தேதி: 11.11.2022

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

 

From around the web