அரசு சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 18 பேர் காயம்

 
அரசு பேருந்து விபத்து

திருப்பதியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோா் பயணம் செய்தனா். இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநா் சக்திவேல்(42) என்பவர் ஓட்டிச் சென்றாா். 

அப்போது திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லைப் பகுதியான லட்சுமிபுரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த பாரதி (25), சௌமியா (18), சந்துரு (21), 2 வயது குழந்தை மற்றும் சேலம் பகுதியைச் சோந்த நடத்துநா் கணேசன் (56) உள்பட 18 பேர் காயம் அடைந்தனா்.

சேலம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web