வரும் 15ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு!!

வருகிற  15-ந்  தேதி  சுதந்திர  தினத்தன்று  அனைத்து  கிராம  ஊராட்சிகளிலும்  கிராம  சபை  கூட்டம்   நடத்தப்பட  வேண்டும்  என்று  தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.  

 
கிராமசபை கூட்டம்

ஓர் ஆண்டுக்கு  6 முறை கிராம சபை கூட்டங்கள் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும் நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என  சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தனிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் , கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம் நேரம் ஆகிய தகவல்களை முறைப்படி கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை உரிய மேற்கொள்ள வேண்டும் என்றும், ம்ேலும், கிராம சபைக் கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் பகுதியை சாந்த முக்கிய பிரச்சணைகள வருங்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க  சிராமசபை கூட்டம் மிகவும் அவசியம் என கூறும் பொதுமக்கள் தற்போது இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்த  கிராமசபை கூட்டம் தற்போது நடைபெற உள்லதால்  15ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.