ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்!!

 
கவர்னர், முதல்வர்

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு  ரம்மியால் பலர் பணத்தை இழப்பதுடன் தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வந்தன.இதனையடுத்து முதல்வருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மீண்டும் தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின்  அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு  ஜூன் 27ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம்  சமர்ப்பித்தது.

ஆன்லைன் ரம்மி

அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டசபை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச்சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது  ஒப்புதல் அளித்துள்ளார்.

ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி

அதைத்தொடர்ந்து தமிழக அரசிதழில் இது வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் ஆன்லைன் சூதாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் சட்டமாக அமலுக்கு வர உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி அதன் மூலம் பணம் அல்லது வேறு வெகுமதிகளை பெறும் வகையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web