மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலை?! மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

 
ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசு வேலையும், சூறையாடப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர்களிடம் இன்று தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்கு தீவைக்கப்பட்டது. 

உயிரிழந்த மாணவியின் விவகாரத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பள்ளியை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீயில் கருகிய தங்கள் பிள்ளைகளின் சான்றிதழை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

அன்பில் மகேஷ்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பள்ளியில் நடந்தது என்ன?அங்கு இருக்கக்கூடிய மக்களின் நிலை என்ன, என்ன மாதிரியான தீர்வு காணலாம், குழந்தை இறந்த பள்ளியில் இருக்கின்ற 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் நிலை, அதில் என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறோம் என்பன குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், இன்று காலை காணொலி காட்சி வாயிலாக விளக்கிக்கூற இருக்கிறோம். 

மாற்று சான்றிதழ் மட்டு மின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்து உள்ளன. வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வோம். மாணவர்களுக்கு தற்காலிக மாற்று சான்றிதழ் எளிதில் வழங்க முடியும். மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் முதல்வருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். அந்த பள்ளியின் அருகே 5 அரசு பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளன.

கள்ளக்குறிச்சி

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்களை பயன்படுத்த முடியுமா? என முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். மேலும், மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web