இன்று குரூப் 1 தேர்வுகள்! 3 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்... இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

 
குரூப் 1

இன்று நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வுகள் நடைபெறுகின்றன. மொத்தம் 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வெழுதி போட்டியிடுகிறார்கள். தேர்வு எழுதுவதற்கு முன்பாக இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க. தேர்வு காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. தாமதமாக செல்பவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதனால், கூடிய விரைவில் அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு அறைக்கு செல்லும் வகையில் பயணப்படுங்கள்.

கேள்விகளை நிதானமாக படித்துப் பார்த்து, தெளிவாக எழுதுங்க. பதட்டப்படாதீங்க. தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய  92 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இதற்கான அறிவிப்பு ஜூலை 21ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்  92 பணியிடங்களுக்கு  3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்டோபர்30 ம் தேதி இந்த தேர்வு நடைபெற இருந்த நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி

அந்த வகையில் ஒத்தி வைக்கப்பட்ட முதல் நிலைத் தேர்வு இன்று நவம்பர் 19ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web