குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!! தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் முறை!!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 

டிஎன்பிஎஸ்சி

அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.

இந்த குரூப் 2, 2ஏ தேர்வை எழுத சுமார் 11.78 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9,95 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என ஜூன் மாதம் முதலே தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இதற்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தெரிவு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

முடிவுகளை தெரிந்து கொள்ளும் முறை:


தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  https://www.tnpsc.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் முகப்பு பக்கத்தில் latest results என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அங்கு Combined civil services examinations – II என்பதை கிளிக் செய்தால், புதிய பக்கத்தில் முடிவுகள் தெரியவரும். அதில்  பதிவெண்ணை டைப் செய்ய முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web