அரை அடி முதல் 20 அடி வரை !! களைகட்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!!

 
விநாயகர்

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. புதுச்சேரி சுற்றுப்புற கிராமப்புறங்களில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அரை விநாயகர் முதல் 20 அடி உயரம் வரை பல்வேறு வண்ணங்களில் விதவிதமான சிலைகள் உருவாக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

விநாயகர்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதூர்த்தி விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டன. இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள், உற்பத்தி முற்றிலும் முடங்கிப் போனது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 2 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்தன.  இந்நிலையில் தற்போது மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி  கொண்டாட்டத்திற்காக சிலை தயாரிப்பு பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், வழக்கம் போல் விநாயகர் சதூர்த்தியை உற்சாகமாக கொண்டாட நாடு முழுவதும் மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.  

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்யும் முறை!

பொம்மை உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் பலரும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். 2 ஆண்டுகள்  இடைவெளிக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிக அளவில் விநாயகர் பொம்மைகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. நடப்பாண்டில் சிறப்பு விநாயகர்களாக லிங்க விநாயகர், பஞ்சமுக விநாயகர், நர்த்தன விநாயகர், பாகுபலி விநாயகர் என உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் விலைகள் ரூ 100 முதல் ரூ 20000 வரை வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web