கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள்?! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!!

 
கிராம சபைக் கூட்டம்

தமிழகத்தில் நடப்பாண்டில் பள்ளிகளில் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அக்டோபர் 2  ம் தேதி காந்தி ஜெயந்தி தமிழகம் முழுவதும்  கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிராம சபை கூட்டம்

அதில் , ‘‘ அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற உள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த மாவட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.

அதன் மூலம் பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கூட்டத்தில் விவாதம் நடத்த வேண்டும். மேலும் ஏற்கனவே பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டத்தின் போது மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். கூட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று அதன் மூலம் பள்ளிகளின் முன்னேற்றம் குறித்த நடவடிக்கைகளை செய்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை

கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு தாங்கள் நடத்தும் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று தமிழக  பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் அதிரடியாக  தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து கிராமசபை கூட்டங்கள் மூலம் பள்ளிகளின் தரம் மேலும் உயர்த்தப்பட உள்ளதால், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web