ஓடும் பேருந்தில் மாரடைப்பு! பயணிகளை காப்பாற்றி, தன் உயிரை விட்ட ஓட்டுனர்!

 
மருதாச்ச

அரசு பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுனர் மருதாச்சலத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சமாளித்தப்படியே பயணிகளைக் காப்பாற்ற நினைத்த ஓட்டுநர், பேருந்தை வேகம் குறைத்து, அருகிலிருந்த சுவற்றின் மீது மோதி நிறுத்தி விட்டு, பேருந்து ஸ்டேரிங்கின் மீது சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 7ஏ என்ற அரசு பேருந்தை சிங்காநல்லூருக்கு மருதாச்சலம் என்ற ஓட்டுனர் ஓட்டிச் சென்றார். இவர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர். அப்போது பேருந்தை ஒட்டிக் கொண்டிருந்த போது ஓட்டுனர் மருதாச்சலத்திற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

அரசுப் பேருந்து

இதனால் நிலைமையை புரிந்து கொண்ட மருதாச்சலம் பேருந்தை அருகில் இருந்த சுவற்றின் மீது மோதி நிறுத்தி விட்டு ஸ்டேரிங் மீது சரிந்து விழுந்த படியே உயிரிழந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று மருதாச்சலத்தை பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சோகத்தில் மூழ்கினர்.

தகவல் அறிந்த விரைந்து சென்ற போலீசார், மருதாச்சலத்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுனரை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி கண்ணீர் விட்டனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

மாரடைப்பால் பணியின் போது உயிரிழந்த மருதாச்சலம் அடுத்த 4 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சொல்லி, பேருந்தின் நடத்துனர் கண்ணீர் விட்டு அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web