கனமழை! ஆற்றில் நொறுங்கி விழுந்த மேம்பாலம்! வீடியோ!

 
ஆற்றில் ரயில்வே மேம்பாலம்

கனமழை எல்லாம் கிடையாது... அது பேய்மழை. ஆமாம்.. அப்படி மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த பேய்மழை காரணமாக இரயில்வே மேம்பாலம் ஆற்றில் உடைந்து விழுந்தது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது.

கனமழை காரணமாக, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் ஒன்று உடைந்து விழுந்துள்ளதாகவும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்னும் குறையவில்லை என்றும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆற்றில் ரயில்வே மேம்பாலம்

அதேபோல மண்டி மாவட்டத்திலும் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. இச்சம்பவம் காரணமாக தர்மசாலா மாவட்டத்தில் உள்ள பால், சதர், துனாக், மண்டி மற்றும் லமதாச் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டது.

கனமழை காரணமாக காங்க்ரா, குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இமாசல பிரதேசத்தில் காங்ரா, சம்பா, பிலாஸ்பூர், சிர்மவுர் மற்றும் மண்டி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இமாசல பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்பதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்க்ரா மாவட்டத்தில் நேற்று நீர் மட்டம் திடீரென அதிகரித்ததால் ஓடையில் சிக்கிய எட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 10 பேரை ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web