கனமழை.. இன்று 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

கனம்ழை காரணமாக இன்று தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மழை
சென்னையை பொறுத்தவரை நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை நவம்பர் 14ம் தேதி வரை தொடரும் . அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இன்று கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களே... விடுமுறை அளிக்கப்பட்டாலும், ரொம்பவே கவனமாக இருங்க.. நீர் நிலை அருகே செல்லாதீங்க. பல இடங்களில் மின்சாரம் வீட்டின் கேட் பகுதிகளிலோ... தண்ணீரில் ஒயர் அறுந்து விழுந்தே இருக்கலாம். எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web