கனமழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கிய நிலையில், பல இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைப்பெற்று வருகிறது.  இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மழை
சென்னையை பொறுத்தவரை நேற்றில் இருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த சில நாட்கள் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

அதே போல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் தேங்கி இருக்கும் அனகாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உட்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web