கனமழை எதிரொலி! மங்களூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கர்நாடகாவில் ஆரஞ்சு அலர்ட்!

 
விடுமுறை

கனமழை எதிரொலியால் இன்று மங்களூருவில் உல்லாலா,  முல்கி, மூடுபிதிரே, பந்த்வாலா என நான்கு தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், கர்நாடகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் கர்நாடகாவில் உள்ள தாவணகரே, சித்ரதுர்கா, தும்கூர், சிக்கபள்ளாப்பூர், ஷிமோகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும் நாளை மறுநாள் முதல் (ஆகஸ்டு 1) மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஷிமோகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் அதிகளவு கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

மழை

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏற்கனவே இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் மங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட உல்லாலா, முல்கி, மூடுபிதிரே மற்றும் பந்த்வாலா உள்ளிட்ட தாலுகாக்களில் செயல்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்கள், தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழை பெய்யும் போது இடி, மின்னல் தாக்கலாம் என்பதால், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web