இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தின்  கடந்த சில  வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கடலூர், விருதுநகர் மாவட்டங்களில்   பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்றும், நாளையும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மழை

அதில்  மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், நாளை மறுநாள் செப்டம்பர் 20ம் தேதி முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியசும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் .இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web