அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29ம் தேதி  முதல் பெருமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் குடியிருப்பு  பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது . சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இன்னும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!

அதன் பின்னர் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதியால்  கடந்த வாரம் முழுவதும்  கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்  122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். பல ஏக்கர் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மழை

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று  நவம்பர் 16ம் தேதி  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web