குவார்ட்டருக்கு அதிக ரேட்! நடுரோட்டில் பெண் விழுந்து புரண்டு ரகளை!

 
போதை பெண்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் அரசுக்கு வருவாய் வருகிறது என்றே வைத்து கொண்டாலும் அடுத்தடுத்த தலைமுறையினரின் உயிரை மட்டும் விட்டு வைத்து, அவர்களை நடைபிணமாய் நடமாட வைத்திருக்கின்றன மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகள்.

இரு பெரும் திராவிட கட்சிகளுமே மது ஒழிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை. அதை அவர்கள் விரும்பவும் இல்லை. மது ஒழிப்பு என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுகவும், வசதியாக இந்த தேர்தலில் ஜெயித்து, ஆட்சிக்கு வந்ததும் மறந்து போனார்கள். பார்ட்டி கலாச்சாரம், ஐடி நிறுவன சம்பளம் என்று வாழ்க்கை முறையைக் காரணம் காட்டி, பெண்கள் குடிக்கிறார்கள் என்பதெல்லாம் பம்மாத்து வேலை. பள்ளி  மாணவிகள் குடிக்கும் வீடியோக்களும் புகைப்படங்களுமே அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு கூடுதல் ரேட் வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறி, நடுரோட்டில் பெண் ஒருவர் போதையில் படுத்து  உருண்டு ரகளைச் செய்தது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரோட்டின் நடுவே படுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். இதை கண்ட சிலர், அவர் மீது ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களோ? என்று அருகில் சென்று அந்த பெண்ணை பார்த்தனர்.

அப்போது அந்தப் பெண் மதுபோதையில் ரோட்டில் படுத்து ரகளை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறாரே என அந்த பெண்ணை சில பெண்களின் உதவியுடன் வாகன ஓட்டிகள் தூக்கிக் கொண்டு ஓரமாக போட்டனர். 

டாஸ்மாக்

ஆனாலும், அந்தப் பெண் மீண்டும் வந்து நடுரோட்டில் படுத்துக் கொண்டு ரகளை செய்தார். டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றம்சாட்டி கொண்டிருந்தார். கூடுதல் என்றால் ஒரு ரூபாய் , 2 ரூபாய் இல்லை, ரூ 10, ரூ 15 என கூடுதலாக விற்கிறார்கள்.

பேருந்தில் பீர்

டாஸ்மாக் கடைகளில் நியாயமான விலையில் மது விற்க வேண்டும் என்று போதையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் போலீசார் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கிக் கொடுத்து கடுமையாக எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web