செப்டம்பர் 11 வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை! கேரள மாணவர்கள் மகிழ்ச்சி!

 
மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

கடவுளின் தேசத்தில் திருவிழா. நம்ம ஊர் தீபாவளி பண்டிகையைப் போல கேரள மாநிலத்துல ஓணம் பண்டிகை அத்தனை விசேஷம். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மலையாள சகோதர, சகோதரிகளால ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிற பண்டிகை. அந்த வகையில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் செப்டம்பர் 2ம் முதல் 11ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை
இது குறித்து கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகை காரணமாக  அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது.

ஓணம்

இதனை முன்னிட்டு நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அந்த  நாட்களை ஈடு செய்யும் வகையில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web