மீண்டும் பயங்கரம்.. நண்பனை 15 துண்டுகளாக வெட்டி கொடூர கொலை !!

 
arrest

டெல்லியை சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல இடங்களிலும் வீசி எறிந்தார். கொடூரமான இந்த சம்பவம் நாடு முழுவதும் உலுக்கியது. மனித குலத்துகே பெரும் அச்சுறுத்தலாக இந்த செயல் அமைந்தது என பலரும் விமர்சித்தனர்.

ஆனால், அடுத்து தொடர்ச்சியாக சில மாநிலங்களிலும் இதே போன்ற கொடூரங்கள் நடந்தன. இந்நிலையில் டெல்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்தில் மீண்டும் இதே போன்று ஒரு கொடூர கொலை நடந்துள்ளது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத் நகரை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி(40), ஆட்டோ ஓட்டுநர். அதே பகுதியில் வசித்து வருபவர் அக்ஷய் குமார் ( 23). அக்ஷய் குமார், மீலால் பிரஜாபதியின் மனைவியுடன் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த மீலால், தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்தவேண்டும் என பிரஜாபதி கண்டித்தார். அதன்பிறகும் அக்ஷய் குமார் அடிக்கடி பிரஜாபதியின் மனைவியுடன் பழகியதாக கூறப்படுகிறது.arrest

இதனால் பிரஜாபதி கடும் ஆத்திரம் அடைந்தார். இதற்கு ஒரே முடிவாக அக்ஷய்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 19ஆம் தேதி பிரஜாபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மகளை டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரஜாபதியின் மனைவி உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்தார்.

இதற்கிடையே தனது மனைவி மருத்துவமனையில் மகளுடன் இருப்பதால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு அக்ஷய் குமாரை பிரஜாபதி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு சில குளிர்பானங்களை குடிக்க கொடுத்தார். சிறிது நேரத்தில் அக்ஷய் குமார் மயங்கி விழுந்ததும் அவரை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.  

arrest

பின்னர் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை 3 பைகளில் எடுத்து சென்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளில் வீசி உள்ளார். நேற்று அங்கு உடல்பாகங்களை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடல் பாகங்களின் 15 துண்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் கொலை செய்யப்பட்டது அக்ஷய் குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web