ஹோட்டல் தீவிபத்து !! 15 அதிகாரிகள் சஸ்பெண்ட்!! விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

 
ஹோட்டல் தீவிபத்து

உத்தர பிரதேசத்தித்தில்  லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச்சில்  லெவானா உணவகம் அமைந்துள்ளது. இங்கு செப்டம்பர் 5ம் தேதி  திங்கட்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார்.

தீவிபத்து

இதன் அடிப்படையில்  எப்.ஐ.ஆர். பதிவு செய்து ஓட்டலின் உரிமையாளர்கள் மற்றும் பொது மேலாளர் கைது செய்யப்பட்டனர் . அத்துடன் இந்த  ஓட்டலுக்கு சீல் வைக்கவும், அதனை இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தீ விபத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் பெயர்கள் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 

சஸ்பெண்ட்
ஓட்டல் அதிகாரிகள், ஊழியர்களின் கவனக் குறைவு, அலட்சியம் மற்றும் விதிமுறை மீறல் இவற்றின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதவிர, லக்னோ நகரில் சட்டவிரோத முறையில் கட்டப்பட்ட ஓட்டல்களின் பட்டியலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் அரசின் விதிமுறைகளை  மீறும் நிர்வாகங்களை உடனுக்குடன் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web