இல்லத்தரசிகள் நிம்மதி!! இன்று சற்று குறைந்தது தங்கம் விலை!!

சென்னையில்  ஆபரணத்   தங்கத்தின்  விலை   சவரனுக்கு  56 ரூபாய்   குறைந்து   39  ஆயிரத்து  144  ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.  

 
தங்கம் விலை குறைவு

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  இன்று   சற்று  குறைந்துள்ளதுஅதன்படி   ஆபரணத்   தங்கத்தின் விலை கிராமிற்கு 7 ரூபாய் குறைந்து,  4,893  ரூபாய்க்கும், சவரனுக்கு 56 ரூபாய்   குறைந்து 39 ஆயிரத்து 144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள்  குறைந்து  64 ரூபாய் 20 காசுகளுக்கும்   கட்டி வெள்ளியின்   விலை    300  ரூபாய்  குறைந்து 64 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web