இல்லத்தரசிகள் அதிர்ச்சி!! பால் விலை திடீர் உயர்வு!!

 
பால்

தமிழகத்தில் நாள்தோறும் 16.41 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் பால் நிறுவனங்களின் பங்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 1.25 கோடி லிட்டர் வரையிலான பால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தனியார் பால் ஒரு லிட்டரின் விலை ஆவின் பாலை விட அதிகமாக உள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் அதிகளவில்   வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

பால்

கடந்த மே மாத வாக்கில் தனியார் பால் மற்றும் தயிரின் விலை லிட்டர் 4 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பால் விற்பனையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு 16 சதவீதமாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் 44 சதவீதம் அளவுக்கு பால் விற்பனை செய்து வருகிறது.

அமுல் பால்

எனவே தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் தன்னிச்சையாக அதன் விலையை அதிரடியாக உயர்த்துகின்றன. இதனால் பால் வியாபாரிகள், விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் பால் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் தனியார் பால் விற்பனை நிறுவனமான ஹாட்சன் இன்று முதல் இந்த விலை உயர்வை அமல்படுத்தியுள்ளது. இதன்படி ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web