விஜய் ஆண்டனி உடல்நிலை எப்படி உள்ளது? - பிரபல இயக்குநர் வருத்தம் !!

 
susindeeran

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் விஜய் ஆண்டனி. பட தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், என பன்முக திறமையோடு விளங்கும் விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது படத்தை பார்க்கவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏனெனில் இவர் தேர்வுசெய்யும் கதையும் அப்படிதான் இருக்கும். அந்த வகையில் கொலைகாரன், 'பிச்சைக்காரன் போன்ற படங்கள் சூப்பர்ஹிட் அடித்தது.இதைத்தொடர்ந்து தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2', கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் போன்ற அடுத்தடுத்த படங்களில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். 

susindeeran

அந்த வகையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற பிச்சைக்காரன், படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த விபத்தின் போது, எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார். இதில் விஜய் ஆண்டனி மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

எனினும் விஜய் ஆண்டனிக்கு அதிக காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.இந்த நிலையில் அவர் இரண்டாது அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதாகவும்,  முகத்தில்  பிளாஸ்டிக் சர்ஜரிசெய்வதாகவும் இரண்டு நாட்களாக செய்திகள் உலாவின. சென்னையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும்  அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் சுசீந்திரன், விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

susindeeran

விஜய் ஆண்டனி மருத்துவர்கள் அறிவுரையின்படி ஓய்வில் உள்ளார். அவரின் உடல்நிலம் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என சுசீந்திரன் கோட்டுக்கொண்டுள்ளார். 

From around the web