இந்த ஆண்டு தீபாவளிக்கு எத்தனை கோடி மது விற்பனை? எந்த மாவட்டம் முதலிடம்…?

 
tasmac liquor sales

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தையை ஆண்டின் விற்பனை சாதனையை முறியடித்து வருகின்றனர்.

tasmac collection

கடந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதி 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 23-ம் தேதி சென்னை-ரூ. 51.52 கோடி, திருச்சி - ரூ. 50.66 கோடி,சேலம் ரூ. 52.36 கோடி, மதுரை ரூ. 55.78 கோடி, கோவை-ரூ. 48.47 கோடி என மொத்தமாக ரூ. 258.79 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

மேலும் கடந்த 22-ம் தேதி சென்னை-ரூ. 38.64 கோடி, திருச்சி - ரூ. 41.36 கோடி, சேலம் - ரூ. 40.82 கோடி, மதுரை ரூ. 45.26 கோடி, கோவை ரூ. 39.34 கோடி என மொத்தமாக ரூ. 205.42 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

tasmac 2

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அரசுக்கே இன்னும் முழுமையான தகவல் கிடைக்காத போது மக்களுக்கு இதுபோன்ற தவறான செய்திகளை தருவது முறையற்றது என்று அமைச்சர் சாடியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

From around the web