வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்! கழுத்தை நெரித்து கொலைச் செய்த மனைவி!

 
ஆறுமுகம், தீபா

வெளிநாட்டில் வேலைப் பார்த்து விட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய கணவனை, மகன், மகளுடன் சேர்ந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் தீபா. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு 17 வயதில் புஷ்பநாதன் என்ற மகனும்,  15 வயதில் கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

ஆறுமுகம் கடந்த 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்து, வீட்டிற்கு மாதாமாதம் பணம் அனுப்பி வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். முதல் நாள் வரையில் ஆரோக்கியமாக சுற்றித் திரிந்த ஆறுமுகம் திடீரென கடந்த நவம்பர் 7ம் தேதி உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி தீபா கூறினார்.  இந்நிலையில், ஆறுமுகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தீபா

இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஆறுமுகம் உடலைக் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில் ஆறுமுகம்  கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ஆறுமுகம், தன்னுடைய மனைவிதீபா  மீது சந்தேகப்பட்டு, சொந்த ஊருக்கு திரும்பியதில் இருந்தே அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரித்து வந்துள்ளன. ஓரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆறுமுகம் அவ்வப்போது குடித்து விட்டு வந்து மனைவி தீபா மற்றும் பிள்ளைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

rip

இதனால் ஆத்திரமடைந்த தீபா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் தீபா. கடந்த நவம்பர் 6ம் தேதி வழக்கம் போல் குடித்து விட்டு ஆறுமுகம் வீட்டிற்கு வந்து தூங்கி விட்டார்.

இது தான் சரியான சந்தர்ப்பம் என ஆறுமுகத்தின் மனைவிதீபா, அவரது மகன் புஷ்பநாதன், மகள் கலைவாணி என 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும், உறவினர்களிடமும் ஆறுமுகம் இயற்கையாக மரணம் அடைந்தார் என நாடகமாடியதை காவல்துறையின் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். அதன் பிறகு  தீபா மற்றும் அவரது பிள்ளைகள் புஷ்பநாதன், கலைவாணி  என 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web