கணவனின் ஆபாச வீடியோ.. மனைவி செயலால் மிரண்ட குடும்பம் !!

 
Rape

பெரம்பலூரை சேர்ந்தவர் விமல்(31). இவருக்கு அதே ஊரை சேர்ந்த 25 இளம்பெண்ணுடன் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அண்மைக்காலமாக விமல் மது பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

Rapw

நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். தாக்கியுள்ளார். கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத அப்பெண், கணவர் விமல் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதில், விமல் தன்னை தாக்குவதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறியுள்ளார். 
தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பவில்லை என்றும், தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் 50 சவரன் நகை வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என கொடுமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உடந்தையாக விமலின் தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அவரது அக்கா மீனா, அக்காவின் கணவர் சிவா ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், விமலின் செல்போனில் பார்த்தபோது, அவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்ததும், அவ்வாறு உறவு வைத்துக் கொண்டதை வீடியோ எடுத்தும் வைத்துள்ளார்.
கற்பழிப்பு
பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி அவர்களை மிரட்டி பணம் வாங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். 
மனைவியான தன்னுடனும் தனியாக இருந்தபோது அதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் விமலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரின் தாய், தந்தையர், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்டவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கொடுத்த புகாரில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
From around the web