வேற வழி தெரியல!! விளைந்த முள்ளங்கி வயலை டிராக்டரால் அழித்து கதறும் விவசாயி!!

 
முள்ளங்கி

விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் சில நேரங்களில் விலை வீழ்ச்சி அடைவதுண்டு. தக்காளி சில நேரம் கிலோ ரூ1க்கு விற்பனையாகும் போது டன் கணக்கில் குப்பையில் கொட்டி அழிப்பர். இதனால் விவசாயிகள் பெரும் விரக்திஅடைந்து விடுகின்றனர். அதே போல் ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது. 

முள்ளங்கி

ஒசூர் ஆலூர் தின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி . இவர் பல வருடங்களாக  விவசாயம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது  தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர்களை பயிரிட்டிருந்தார். இவை நல்ல விளைச்சல் பெற ஏக்கருக்கு  ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருந்தார்.ஆனால் தற்போது சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.18 முதல் ரூ.20க்கு விற்கப்படுவதால், விவசாய தோட்டங்களில் விவசாயிகளிடம் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.4 முதல் ரூ.5 வரை   விலை பேசப்படுவதாக கூறப்படுகிறது.

வயல்
இதைத்தொடர்ந்து முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து விரக்தியடைந்த விவசாயி ராமமூர்த்தி, தான் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த முள்ளங்கிகளை டிராக்டர் கொண்டு உழுது அழித்து தள்ளினார். இது குறித்து ராமமூர்த்தியிடம் கேட்ட போது, ‘‘தற்போது சுமார் 15 டன் முள்ளங்கிகளை நான் டிராக்டர் கொண்டு அழித்துவிட்டேன். இதைத்தொடர்ந்து இந்த நிலத்தில் அடுத்ததாக சந்தையில் நல்ல விலை போக உள்ள மலர்கள் அல்லது முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்ய உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web