ட்விட்டரை தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை!! தடுமாறும் ஊழியர்கள்!!

 
ஐடி நிறுவனங்கள்

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்ட பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஐடி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் பலர் அச்சத்திலும்,   அதிர்ச்சியிலும் உள்ளனர். 
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முண்ணனியில் இருப்பவர்  எலான் மஸ்க்.

எலான் மஸ்க்

உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நவம்பர் 5ம் தேதி ட்விட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், ட்விட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி ஃபேஸ்புக் நிறுவனத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், 'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன்.

ஐடி நிறுவனம்

எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web