ஹீலியம் வாயுவை செலுத்தி ஐடி ஊழியர் நூதன தற்கொலை!! தொடரும் ஆன்லைன் விபரீதங்கள்!!

 
இந்துமதி

தமிழகத்தில் இளம்பெண்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைனை பார்த்து சமையல், மருத்துவம் வரிசையில் தற்போது தற்கொலையும் இணைந்துள்ளது மிகவும் வேதனையான விஷயம். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தில் வசித்துவருபவர் திருவேங்கடசாமி இவருடைய மகள் இந்துமதி வயது 25 பி இ. இவருக்கும் நல்ல கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு சாரதிக்கும்  3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்து

இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்து மதியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை காரணத்தால் தனது தந்தை வீட்டிற்கு இந்துமதி வந்தார். செப்டம்பர் 17ம் தேதி பிற்பகல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்குவதற்காக உள்ளே சென்றார். மாலை 7 மணி வரை கதவை திறந்து வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்ததில் இந்துமதி முகத்தில் பாலிதீன் கவரைபோட்டு முகத்தில் கட்டிக் கொண்டு பலூனில் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் கேஸ் டியூப் வழியாக வாயில் வைத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆன் லைனில் ஹீலியம் வாயு வாங்கி இந்த தற்கொலையை செய்துள்ளார். 

ஆன்லைன்
காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்து மதியின் உடலை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3  மாதங்கள் மட்டுமே  ஆனதால் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்துமதியின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. ஆர்.டி.ஓ விசாரணைக்கு பின்பே தற்கொலைக்கான காரணம் குறித்துதகவல்கள் தெரிய வரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 3 மாதத்தில் தாய் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web