அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது… மதுரைக் கிளை அதிரடி…

 
மதுரைக் கிளை

தமிழ்நாடு அரசு அனுமதி இன்றி இனி எங்கும் சிலை வைக்கக்கூடாது எனவும் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை   அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   விருதுநகர் மாவட்டம், அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ''தியாகி இமானுவேல் சேகரன் சிலை வைக்க அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தேன்.

மதுரைக் கிளை

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சிலை வைக்க முறையான அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த நபர்களின் சிலையை முறையான அனுமதியின்றி வைப்பது ஏற்புடையதல்ல. மனுதாரரின் கோரிக்கை மனு ஆட்சியரிடம் நிலுவையில் உள்ளது. இதற்கு பல நடைமுறைகள் உள்ளன. எனவே, முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை நவம்பவர் 19க்குள் அங்கிருந்து அகற்றி பாதுகாத்து வைக்க வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் விருதுநகர் கலெக்டரின் அனுமதி கிடைத்ததும் அந்த சிலையை அங்கு வைக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். இது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மதுரைக் கிளை

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சிலை என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிலைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்க கூடாது.   மீறி சிலைகள் வைத்தால் உடனடியாக அந்த சிலைகளை அகற்ற வேண்டும் . இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்  

From around the web