ஓட்டத் தெரியாமல் கார் வாங்கினால் இப்படி தான்.. பூஜைக்கு சென்றபோது கோர விபத்து !!

 
நந்தினி

புதிதாக வாங்கப்பட்ட காருக்கு பூஜை போட கொண்டு வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். 

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பர்வதகிரி மண்டலத்தில் உள்ள அன்னரம் தர்காவில் புதியதாக வாங்கப்பட்ட காருக்கு பூஜை செய்வதற்காக ரபீக் என்பவர் காரை ஓட்டி வந்தார். புதிதாக வாங்கிய காருக்கு தர்காவில் பூஜையை முடித்துவிட்டு  கூட்டத்தின் மத்தியில் ஓட்டிச் சென்றார். 

அப்போது கூட்டத்தில் பிரேக் போடுவதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கார், அங்கிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை இடித்துத்தள்ளியபடி வந்தது.

நந்தினி

 அப்போது ரோட்டில் சென்றுகொண்டிருந்த சிலர், நிலைமையை உணர்ந்து சாலையோரம் செல்வதற்குள், அந்த கார் அவர்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 6 பேர் படுகாயமடைந்தனர். நந்தினி என்ற பெண் ஆபத்தான நிலையில் உள்ளார்.

நந்தினி

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் ஐபிசி பிரிவு 337 இன் கீழ் வழக்கு பதிவு செய்து ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

From around the web