உடனடி அமல்!! ஓட்டுனர் உரிமத் தேர்வுகளுக்கு புதிய விதிமுறைகள்!!

 
ஓட்டுனர் உரிமம்


தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை  போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில்  போக்குவரத்து ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையின் படி அனைத்து ஓட்டுநர் உரிமத் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்படும்.

ஓட்டுனர் உரிமம்

அதே போல் வாரத்தில் 3 கிழமைகள் அதாவது திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் மட்டும்  பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள்  பெறப்படும். இந்த  விண்ணப்பங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். சாதகமான மற்றும் வசதிப்படும் நாட்களில் பொதுமக்கள் தங்களது நாள் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  

டிரைவிங் லைசென்ஸ்

செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்படும். இந்த புதிய உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்களும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் விதிகளை மீறுவது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web