அழைப்பிதழில் எம்.எல்.ஏ. பேரு இல்லை! விளையாட்டு அரங்க திறப்பு விழாவையே ரத்து செய்த அதிகாரிகள்!

 
மேம்பாலம்

அரசாங்கம் கட்டிக் கொடுக்கிற அரங்கத்துல ஆரம்பிச்சு, பேருந்து நிலையம்னு, மேம்பாலம்னு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுறது என்ன லேசுபட்ட காரியமா? தமிழகத்தின் இரும்பு பெண்மணின்னு சொல்ற ஜெயலலிதா காலத்துலேயே பல கட்டிடங்களும், பாலங்களும் அம்மையார் திறந்து வைக்கற தேதி கிடைகாம பல மாதங்களாக வேலைகள் முடிந்தும், பயன்பாட்டுக்கு வராம அப்படியே கிடந்தது.

இவ்வளவு ஏன்.. எடப்பாடியின் ஆட்சி காலத்துல கூட ஓபிஎஸ்.. ஈபிஎஸ்..ன்னு ரெண்டு பேரும், யாரு பவருன்னு மல்லுக்கட்டிக்கிட்டு, மக்கள் பிரச்சனைகளை மறந்தப்போ, பல மாசமா மேம்பால பணிகள் முடிந்தும், திறந்து வைக்காமல் இருந்த பாலத்தை, இரவோடு இரவா பொறுமையிழந்து மக்களே பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறமா அவசர அவசரமாக அடுத்த நாள் அந்த பாலத்தைத் திறந்து வெச்சாங்க.

முந்தைய திமுக ஆட்சி காலத்துல கூட இதுக்கு உதாரணங்கள் இருக்கு. அவங்களும் நல்லவங்க கிடையாது. இவங்களும் நல்லவங்க கிடையாது. இதுல ஆள்கிற முதல்வரைக் குற்றம் சொல்லக் கூடாது. பல விஷயங்கள் அவங்களுக்கு தெரியாமலேயே ஜால்ரா போடுகிற அதிகாரிகளேஎ எடுக்கிற முடிவுகளா இருக்கு.

திமுக அதிமுக

சமீபத்திய செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்பட இருட்டடிப்பு கூட முதல்வர் கவனத்துக்கே போகலையாம். அதிகாரிகளே.. எதுக்கு வம்புன்னு மோடி புகைப்படத்தைத் தவிர்த்திருக்காங்க. அப்புறமா மேலிடத்துல இருந்து செம டோஸ் வாங்கியிருக்காங்க. ஏன்னா.. நமக்கு பிடிச்சிருக்கோ... பிடிக்கலையோ.. அவரு தான் நம்ம நாட்டு பிரதமர். அதே போல ஸ்டாலின் தான் நம்ம மாநில முதலமைச்சார்.

விஷயம் அது கிடையாது. அப்படி கடலூர்ல கட்டி முடிக்கப்பட்டு பல நாட்களாக சும்மா போட்டு வைக்கப்பட்டிருந்த விளையாட்டு அரங்கத்தை ஒரு வழியா திறக்க முடிவு செய்தாங்க. கடைசி நேரத்துல தான் திறப்பு விழா அழைப்பிதழில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. பெயர் இடம்பெறவில்லைன்னு தெரிஞ்சது. இதனால பிரச்சினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விழா ரத்து செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூரில் அண்ணா விளையாட்டு அரங்கம் பழுதடைந்த நிலையில் அதனை சீர் செய்யும் பணி நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் தடபுதலாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கூறும்போது, ‘‘பணிகள் இன்னும் முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.

கடலூர்

ஆனால் விழா ரத்தானது குறித்து அப்பகுதி மக்களால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. விளையாட்டரங்க திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் கலெக்டர் பெயர் தொடங்கி, சிறப்பு அழைப்பாளர்கள் வரிசையில் மேயர், எஸ்.பி., துணை மேயர், அதிகாரிகள் மற்றும் நன்கொடை அளித்தோர் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாம். ஆனால் அந்ததொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பனின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. அய்யப்பன், கலெக்டரை நேரடியாக தொடர்பு கொண்டு இது பற்றி விசாரித்துள்ளார். அவர், மாவட்ட விளையாட்டு அலுவலரை கையை காட்டியுள்ளார். மாவட்ட விளையாட்டு அலுவலரோ கலெக்டர் மீது கையை திருப்பிக் காட்டியுள்ளார். இதனால் பிரச்சினை பெரிதாகிவிடுமோ என்ற அச்சத்தால்தான் விளையாட்டு அரங்கு திறப்பு விழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அரசல்புரசலாக பேசிக் கொள்கிறார்கள்.

பத்திரிகையில் பெயர் போடாததால் பிரச்சினையில் முடிந்த பல வீட்டு விசேஷங்கள் போல விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் அரங்க திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது அந்த தொகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web