அடுத்த 2 மணி நேரத்தில்... 28 மாவட்ட மக்களே உஷார்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29 முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் 27 மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு, திருப்பாலைவனம், மணலி, புதுநகர், சோழவரம், பஞ்செட்டி, காரனோடை, காட்டூர் உட்பட பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை  விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், பழவேற்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

பலத்த காற்று மற்றும் கடல் அதிகமான சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். படகுகளை கரையில் பாதுகாப்பாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் யாரும் செல்ல வேண்டாம். மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாகை, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web