கொரோனா தொற்றால் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ரத்து!!

கொரோனா  தொற்றை  கட்டுப்படுத்தும்  நோக்கத்துடன்  ஒடிசா  மாநிலத்தில்  சுதந்திர  தின  கொண்டாட்டங்களை  எளிய  முறையில்   நடத்த   அரசு  முடிவு செய்துள்ளது.

 
சுதந்திர தின கொண்டாட்டங்கள் ரத்து

இந்தியா கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது.  இதனால் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் ஆண்டுதோறும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த  ஆண்டு சுதந்தினர தின கொண்டாட்டங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோலாகலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஒடிசா மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சுதந்திர தினத்தை எளிமையாக நடத்தப்படும். மேலும்  அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை எதுவும் இடம்பெறாதுஎன்றும் முடிவு செய்து அறிவித்துள்ளது. மேலும் சுதந்திர தினத்தின் போது பொது மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கமான அணிவகுப்பு மரியாதையும், போலீஸ் பாண்டு மட்டும் இந்த ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அணிவகுப்புகள் மற்றும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தின் அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web