இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதல்!! வெளியான வீடியோ!!

 
இந்தியா-சீனா மோதல்

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் செயற்கைக்கோள் படம் மற்று வீடியோ வெளியாகியுள்ளது.  

2 வீரர்கள் பலி 

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்தாக கூறப்படுகிறது. இதனை அறிந்த இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளனர். 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை அடைய 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மேற்கொண்ட முயற்சி இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன தரப்பில் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.  


சீன வீரர்கள் இந்திய எல்லையை உடைக்க விரும்பினர், ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் அந்த முயற்சியையும் முறியடித்தனர். எனினும், பின்னர் இரு நாட்டு வீரர்களும் இந்தப் பகுதியில் இருந்து வெளியேறினர்.   இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள யாங்சே பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலின் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.  கடந்த ஜூன் 15ம் தேதி   கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

From around the web