இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது! பிசிசிஐ செயலாளர் அறிக்கை!

 
இந்தியா பாகிஸ்தான்

ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆசியக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பயணம் செய்யாது. அத்துடன்  ஆசியக் கோப்பைத் தொடர் போட்டிகளில் பொதுவான வேறொரு இடத்தில் தான் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். 

ஜெய்ஷா

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் - இந்தியா இடையே எந்த தனிப்பட்ட போட்டிகளும் நடத்தப்படவில்லை.  ஐசிசி சார்பாக நடக்கும் போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை ரசிகர்கள் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான்

நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடர் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த கோப்பையை இலங்கை அணி  வென்றுள்ளது. மேலும் ஆசிய கோப்பை 2023ம் ஆண்டுக்கான போட்டிகள்  நடுநிலையான இடத்தில் நடத்துவோம்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும், எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம், ஆனால் 2023 ஆசிய கோப்பைக்கு, போட்டி நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web