காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் இறுதி சுற்றுக்கு தகுதி!

 
ஸ்ரீஹரி நடராஜ்

காமன்வெல்த் நீச்சல் போட்டியில், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதன் மூலமாக பதக்கத்தை உறுதி செய்துள்ளார் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று உள்ளனர்.

பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

ஸ்ரீஹரி நடராஜ்

இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி அரை இறுதிச் சுற்றில் இந்திய இளம் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 54:55 வினாடிகளில் கடந்து 7-ம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பினை உறுதி செய்துள்ளார். அரையிறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா வீரர் பீட்டர் கோட்ஸே, 53.67 வினாடிகளில் பயண தூரத்தை கடந்து, முதலிடம் பிடித்தார்.

ஸ்ரீஹரி நடராஜ்

முன்னதாக, காமன்வெல்த் ஆண்களுக்கான 400மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில், இந்திய வீரர் குஷாக்ரா ராவத் 3:57.45 வினாடிகளில் இலக்கை 14வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோனது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web