இந்தியாவின் ஸ்டீல் மேன் டாக்டர் ஜாம்ஷெட் ஜெ.ராணி மரணம்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
டாக்டர் ஜாம்ஷெட் ராணி

இந்தியாவின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படுபவர்  டாக்டர் ஜாம்ஷெட் ஜெ இரானி . இவர் நேற்று அக்டோபர் 31 திங்கட்கிழமை இரவு ஜாம்ஷெட்பூரில் உயிரிழந்தார். இது குறித்து  டாடா ஸ்டீல் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் ‘பத்மபூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் தான் இந்தியாவின் ஸ்டீல் மேன். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கு டாடா ஸ்டீல் குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

 ripஜூன் 2, 1936ல், ஜி.ஜி. இராணி மற்றும் குர்ஷித் இரானியின் மகனாக பிறந்த ஜம்ஷெட் ஜே இரானி 1963ல் இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் உலோகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் 1963 இல் பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

டாடா ஸ்டீல்ஸ்

அதன் பிறகு 1968ல் இந்தியாவில் டாடா ஸ்டீல்சில்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனரிடம்  உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1985 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 43 ஆண்டுகள் டாடா ஸ்டீல் குழுமத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், ஜூன் 2011 ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web