ஆசையால் மோசம் போன அப்பாவி இளைஞர்!! கீர்த்தி சுரேஷ் போட்டோவை பார்த்து ரூ.40 லட்சம் பறிகொடுத்த பரிதாபம்!

 
மஞ்சுளா

சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.  கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் பேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை கொஞ்சம் எடிட் செய்து டிபியாக வைத்துள்ளார்.  இந்த அக்கவுண்ட் மூலம் ஆண்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார்.  

மஞ்சுளா

இவர் விரித்த வலையில் விஜயாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமா என்ற நபர் சிக்கியுள்ளார் . தனக்கு ரெக்வஸ்ட் வந்த ப்ரோபைலை பார்த்த பரசுராமாவுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் தெரியவில்லை. யாரோ ஒரு அழகான பெண் நம்முடன் பழக வேண்டும் என ரெக்வஸ்ட் கொடுத்ததாக நினைத்து அவரும்    அதை அக்செப்ட் செய்துள்ளார். பின்னர் மஞ்சுளாவும் பரசுராமாவும் பேஸ்புக்கில் சாட் செய்யத் தொடங்கியுள்ளனர்.  பரசுராம் டிபியை பார்த்து ஏமாந்ததை அறிந்த மஞ்சுளா அவரின் நம்பர் வாங்கி வாட்ஸ்ஆப் மூலமாகவும் பேச ஆரம்பித்துள்ளார். தான் கல்லூரி படிக்கும் இளம்பெண், என்றும் எனது படிப்புக்கு உதவி செய்கிறீர்களா என்று மஞ்சுளா நாடகம் போட்டு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். இடையில் பரசுராமாவிடம் காதல் வார்த்தை பேசி பேசி ஆசையையும் தூண்டிவிட்டுள்ளார் மஞ்சுளா.

கைது

இதனை நம்பிய பரசுராம் மஞ்சுளா கேட்கும் போதேல்லாம் அவருக்கு பணம் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி பரசுராமாவிடம் ஆசையாக பேசி அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை மஞ்சுளா ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த மஞ்சுளா, இந்த வீடியோவை வைத்து பரசுராமை பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பரசுராம்    போலீசில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் விசாரணை மேற்கொண்ட   சைபர் கிரைம் போலீசார் மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கல்லூரி பெண் இல்லை என்றும் அவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் பரசுராமாவிடம் இருந்து ஏமாற்றிய பணத்தை வைத்து  பைக், 100 கிராம் தங்கம் என மஞ்சுளா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து   விசாரணையில் அம்பலமானது. மேலும் இந்த மோசடியில் மஞ்சுளாவிற்கு உடந்தையாக இருந்த அவரது கணவரை     போலீசார் தேடி வருகின்றனர்.

 

From around the web