மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
மின் கட்டணம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு கூறும்போது, ‘‘.தி.மு.க. தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால தமிழக ஆட்சி காலத்தில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக உயர்ந்துள்ளது. இதை சரி கட்டும் வகையில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 201- யூனிட் முதல் 300 யூனிட் பயன்படுத்தும் பயனாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.72.50 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. அதற்கு அடுத்தபடியாக 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் மாதந்தோறும் ரூ.147.50 கூடுதல் கட்டணமும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதந்தோறும்  ரூ.297.50 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

மின் கட்டணம் செலுத்த ‘QR code’ வசதி விரைவில் அறிமுகம்!

மேலும் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களிடம் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக மின்வாரம் தெரிவித்திருந்தது. இந்த கட்டண உயர்வால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்காக தமிழக மின்வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளளயில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் பணியில் இல்லை. இந்த நேரத்தில் கட்டண உயர்வு பிரச்சினைக்கான தீர்வு காண்பது கடினம். இதற்கிடையில் தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மின் கட்டணம் செலுத்த ‘QR code’ வசதி விரைவில் அறிமுகம்!

சட்டத்துறை சார்பில் உறுப்பினர் இல்லாமல் தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதமாகும்’’ என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வாக தமிழ்நாடு  மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவோ, அதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தவோ கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு நீதிபதி தனது உத்தரவை வாசித்தார். அதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் மற்றும் சட்டத்துறை உறுப்பினர் பொறுப்புகள் தற்போது காலியாக உள்ளது. இந்த 2 காலியிடத்தையும் தமிழக அரசு ஒரே நேரத்தில் நிரப்பி இருக்க முடியும். எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கப்படும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீதான இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். மேலும் இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை மட்டுமே தொடரும். இருப்பினும் கட்டண உயர்வு குறித்து நடத்தப்படும் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு தடை கிடையாது அதை நடத்தலாம் என்றும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web